Header image alt text

ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் பணிகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றின் நிமித்தம் காரணமாகவே ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா (Akira Sugiyama) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா, குறித்த கட்டடப் பணிகளைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய கடந்த 09 நாட்களில் 762 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 733 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நெஷனல் நிறுவனத்திற்கு 33 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. Read more

2016 மற்றும் 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள் 8000 பேர் நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இம் மாதம் 3ம் திகதியிலிருந்து கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். நிட்டம்புவ சாரிபுத்த, மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியவற்றுக்கு கடந்த 3ஆம் திகதி மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். Read more

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையை இன்றுமுற்பகல் 10மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறங்கியுள்ளது. இந்தியாவின் சென்னையிலிருந்து வந்த அலைன்ஸ் எயார் நிறுவன விமானமே தரையிறங்கியுள்ளது. இன்றைய நிகழ்வில் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அசோக் அபேசிங்க, ரவி கருணாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ சுமந்திரன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், Read more

எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நள்ளிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான ளுஞ468 ரக விமானத்தில் இலங்கை வந்திருந்த போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எவன்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்று தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றம் வெளியிட்டிருந்த உத்தரவு ஒன்றிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

புத்தளம் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 623 குடும்பங்களைச் சேர்ந்த 2183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வீடுகள், பாடசாலைகள், மதஸ்தளங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பனவும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது. புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 622 குடும்பங்களும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரும், வென்னப்பு பிரதேச செயலகத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 295 பேரும், Read more

யாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற பெயரில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த விபரம் பின்வருமாறு: Read more