எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நள்ளிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான ளுஞ468 ரக விமானத்தில் இலங்கை வந்திருந்த போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எவன்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்று தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றம் வெளியிட்டிருந்த உத்தரவு ஒன்றிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.