ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய கடந்த 09 நாட்களில் 762 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 733 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நெஷனல் நிறுவனத்திற்கு 33 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல், நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகளை பெற்றுக் கொடுத்தல், அரச அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட முறைப்பாடுகள் அதில் அடங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.