Header image alt text

கனடாவிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு பொறுப்பாளராக க.கந்தசாமி, உதவிப் பொறுப்பாளராக க.விஜயசேகரன் (சங்கர்),

நிதிப் பொறுப்பாளராக பா.கிருபாகரன், ஊடகத் தொடர்பாளராக ச.பாஸ்கரன், இணைப்பாளராக செ.குணபாலன் ஆகிய தோழர்களும், அங்கத்துவ நடவடிக்கைப் பொறுப்பாளர்களாக சார்ள்ஸ் ஜோசேப், விஜயரட்ணம் விஜிதரன், தி.அருண், பிரதீபராஜ் ஜிந்துஜா ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரையும், கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அத்துடன், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். இந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. Read more

இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக மீண்டும் அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களினால் இங்கிலாந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் இன்று தொடக்கம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. Read more

வடக்கு மாகாணத்தில் கரைச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இராணுவத்தினர் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

இது தொடர்பான நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணியின் ஒரு பகுதி இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்குத் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டது. Read more

ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.

விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக ஆவணங்களின் ஊடாக நிறைவேற்ற இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை. Read more

ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்­சிகள் 13 கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­மைக்கு பௌத்த மத­குரு­மார்கள் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர்.

அத்­தோடு இந்த 13 கோரிக்­கை­களில் ஒன்­றான ஒற்­றை­யாட்சி நீக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை துளி­ய­ளவும் ஏற்க முடி­யாது என இவர்கள் தெரி­வித்­துள்­ள­தோடு, கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் அவர் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் என்றும் கடு­மை­யாக சாடி­யுள்­ளனர். Read more

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்றையதினம் வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் மற்றும் 29 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read more