வடக்கு மாகாணத்தில் கரைச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இராணுவத்தினர் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

இது தொடர்பான நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணியின் ஒரு பகுதி இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)