Header image alt text

மன்னாரில் பொலிஸார் உள்ளிட்ட இருவர் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனமொன்றில் குறித்த மூவரும் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையினரின் சோதனைச் சாவடியில் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்.

பின்னர் படைத் தலைமையகத்தில் இராணுவ தளபதிக்கு கிளிநொச்சி படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டது. படைத் தலைமையகத்திற்கு வருகைதந்த இராணுவ தளபதி, படையினர் மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் இறுதியில் அங்குள்ள படையினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் நேற்று புத்தளம், வண்ணாத்திவில்லு அருவக்காலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசா இன்றி, புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். Read more

யாழ். சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது 6) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. Read more