சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் நேற்று புத்தளம், வண்ணாத்திவில்லு அருவக்காலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசா இன்றி, புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.