தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளை தனது குழு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல் பல பிரச்சாரக் கூட்டங்களிலும் எதிர்க் கட்சித் தலைவர் நேற்று பங்கேற்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சூரியவௌ தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் அவர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அங்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு கூடியிருந்த மக்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினரின் திஸ்ஸமகாராம இல்லத்தில் மக்கள் சந்திப்பிலும் அவர் பங்கேற்றார்.

இந்த சந்தர்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவும் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இதேவேளை நேற்று (20) இரவு ரிதிகமயில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்திலும் எதிர்க் கட்சித் தலைவர் கலந்துக் கொண்டார்.

இதன் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகள் இதுவரையிலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் எவ்வாறாயினும் அவர்கள் தமது கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனை நாட்டை பிளவுப்படுத்துவதை இலக்காக கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை பிளவுப்படுத்த அனுமதிக்க போவதில்லை எனவும் ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்