ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று (22) முதல் ஈடுபடவுள்ளது.

இதற்காக 30 பேர் கொண்ட குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட மற்றுமொரு குழு, எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.