பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, அவரது மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது