ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆகிய இரண்டு நாள்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களிடம் விநியோகிப்பதற்காக எதிவரும் 25 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும்.