வவுனியா – சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய பகுதிகளில், தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, இன்று (23) காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும், நன்னீர் மீன் பிடித்தலில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், சூடுவெந்தபுலவு பகுத​ஜயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த விசேட அதிரடிப்படையினர், அவர்களிடம் இருந்து 150,000 ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவெனவும் கூறினர்.