ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 26 பேர் , கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை கலைப்பதற்காக கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியதாக தெரிவித்து குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்ப மகபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.