ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 பெண்கள் உள்ளிட்ட சந்தேக நபர்கள், மட்டக்களப்பு நீதவான் ஏ.சி, ரிஷ்வான் முன்னிலையில் இன்று (24) ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினூடாக நுவரெலியாவில், ஆயுதப் பயிற்சி பெற்றமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.