ஐரோப்பிய  ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர்,  திருகோணமலைக்கு  இன்று(25)  விஜயம் மேற்கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், கட்சிகளின் நிலைப்பாடு, மக்களின் நிலைப்பாடு,  தேர்தல் முறைகேடுகள்  தொடர்பில், இக்குழுவினர் பல பிரிவினரையும் சந்தித்து ஆராய்ந்தனர்.

இவ்விஜயத்தின்போது, ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின்  பிரதிநிதிகள்  எனப் பலரையும் சந்தித்தனர்