ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள முயற்சி பெருமளவில் வெற்றியடைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் அழைத்துள்ளது.

இவர்கள் எதிர்வரும் 11ஆம், 12 ஆம் திகதிகளில் இலங்கை வரவுள்ளனர். ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்காக பல சுயாதீனக் குழுக்கள் தற்பொழுது இலங்கை வந்துள்ளன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவும், ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்