ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (26) ஆரம்பிக்கப்பட்டதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இவற்றை விநியோகிப்பதற்காக நிரந்தர ஊழியர்களுக்கும் மேலதிகமாக பதிவு செய்யப்பட்ட தற்காலிய ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்களர் அறிவிப்பு அட்டை விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

54 இலட்சம் வீடுகளுக்கு இவை விநியோகிக்கப்படும் என்றும் தபால் மா அதிபர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 9 ஆம் திகதி அளவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்களர் அட்டைகளை அச்சிடும் பணி அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று அரச அச்சகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்படவுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்