இஸ்லாமிய நாடு என அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதனை உறுதிசெய்துகொள்வதற்காக ( DNA) மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.