யாழ். நயினா தீவில் இன்று (28) அதிகாலை மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.
இறங்குதுறையில் இருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றினால் வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி வீசப்பட்டிருப்பதுடன், ஆலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறு கடைகளும் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.