முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது  

அதனை அடுத்து குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் குறித்த பகுதியில் அகழ்வு செய்வதற்கான அனுமதி கோரப்பட்டு இருந்தது

அதற்கமைவாக, கடந்த 25ஆம் திகதி  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற அனுமதியோடு நேற்று (28) இரண்டாவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,  மூன்றாவது நாளாக இன்றும் (29) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது,  மண்டை ஓடு உள்ளிடட பல்வேறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.