பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த உத்தியோகப்பூர்வ துப்பாக்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டு கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகப்பூர்வ துப்பாக்கியே கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயுள்ளது.

துப்பாக்கியுடன் அதில் காணப்பட்ட எட்டு ரவைகளும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.