இம்முறை ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இம்முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இதனால் இம்முறை வாக்குச்சீட்டு வழமைக்கு மாறாக மிக நீளமாகுமாக இருப்பதால் வாக்களார்களுக்கு இலகுவாகும் விதத்தில் இவ்வாறு வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரையில் வாக்களிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இம்முறை அதற்கு மேலதிகமாக ஒரு மணித்தியாலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.