யாழ். வலி தென்மேற்கு பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை உப அலுவலகத்தில் அமைந்துள்ள நூலகத்தில் உதவி நூலகராகக் கடமையாற்றும் பெண் ஊழியரான திருமதி கௌதமி தனுசீலன் என்பவர் கடந்த சனிக்கிழமையன்று (26.10.2019) கடமை நேரத்தின்போது நூலகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலில் தலையில் காயமடைந்த அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். இதனைக் கண்டித்து வலி தென்மேற்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காரியாலயத்திற்கு முன்பாக ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் போதையில் வந்து தாக்குதல் நடத்திய நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், தாம் சுமுகமாக கடமையாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறும் செயலாளரைக் கோரியுள்ளனர்.