உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் பின்தொடர்பவர்களுடையது என கருதப்படும் தமிழகத்தின் 6 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ அமைப்புடன் மற்றும் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பு கொண்டுள்ள நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது இரண்டு மடிக்கணினிகளும், 08 கைப்பேசிகளும், 05 சிம் அட்டைகளும் எஸ்.டீ நினைவக சிப் ஒன்றும் மற்றும் 14 ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.