எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே தெரிவித்துள்ளார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்காக இம்முறை 1 கோடி 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று வாக்காளர்கள் அட்டையை விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடகப்படுத்தப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், விசேட சேவைக்குத் தபால் ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்த தபால்மா அதிபர் தபால், ஊழியர்கள் இன்று வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக வீடுகளுக்கு வருவதால் நாய்களைக் கட்டிப்போட்டு வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.