யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அறையை உடைத்து உள்சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

குறித்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.