ரெலோவின் சாதாரண அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான தமது தீர்மானம் அடங்கிய கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தாவிடம் கையளித்துள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதற்கு, ரெலோவினால் சிவாஜிலிங்கத்திற்கு இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகப்போவதில்லை என்று தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம், கட்சியின் சாதாரண அடிப்படை உறுப்புரிமையிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரெலோவின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.