உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம், வாக்காளர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அஞ்சல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள், எதிர்வரும் 9 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்காக 9 ஆயிரம் அஞ்சல் ஊழியகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதிகளில் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், தங்களது பிரதேசத்தில் உள்ள அஞ்சல் காரியாலயங்களுக்கு சென்று, தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குரிய தபால் காரியாலயத்தில் சென்று அடையாளப்படுத்தகூடிய ஆவணங்களை காண்பித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.