நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 11.15 மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு குறித்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.