பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் நேற்று மலை நாட்டிற்கு வருகை தந்தபோது அவரை விமான நிலையத்தில் வைத்து நீதிபதி தப்புல டி லிவேராவினால் வரவேற்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நீதிமன்ற அமைச்சர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். குறித்த ஒன்று கூடல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் நீதிமன்ற கட்டமைப்பு, நிதிமன்ற சலுகைகள் அபிவிருத்தி, உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகிறது.