இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து நீதி அமைச்சர் என்ரூ லிட்டுலுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்தர்பத்தில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நியூசிலாந்து நீதி அமைச்சருடன் வருகைதந்த பிரதநிதிகள் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.