சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எயார்லையன்ஸ் விமானசேவைகள் நவம்பர் 11 முதல் ஆரம்பமாகிறது. இவ் விமானசேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 11.45க்கு தரையிறங்கும். பின்னர் சென்னைக்கு பிற்பகல் 2.10க்கு சென்றடையும். இந்தசேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்னதாக நவம்பர் முதலாம் திகதி சேவைகள் ஆரம்பமாகவிருந்தபோதும் சில நடைமுறைகளால் தாமதம் ஏற்படுத்தப்பட்டது. இதேவேளை சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் 12ஆயிரத்து 990 ரூபாவாகும்.