மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) உடன் இலங்கை இன்று கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி தலையிட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைத் தடுக்க வேண்டுமென தெரிவித்து அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.