இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியை வழங்க கொரியா இணங்கியுள்ளது.

இது தொடர்பிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 0.15 வீத வட்டியுடன் முழசநய நுஒiஅடியமெ-இனால் இந்த கடன் வழங்கப்படவுள்ளது. மேலும் கடனை திருப்பிச்செலுத்த 40 வருடங்கள் கால அவகாசமும் சலுகை தவணையடிப்படையில் 10 வருட அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்வியமைச்சினால் இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.