எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கை மற்றும் எஞ்சிய சில நாட்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றி ஆராயப்படவுள்ளது. இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது