அதி நவீன வசதிகளுடன் சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டே பெலவத்தை அகுரேங்கொடயில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், முப்படைத் தளபதிகளுடன், பாதுகாப்பு துறை பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். ஜனாதிபதிக்கு கௌரவம் வழங்கும் வகையில், 21 கௌரவ வேட்டுகள் தீர்க்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் 8 தினங்களில் தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறவுள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக முப்படையினரும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு தனிப்பட்ட வகையில் கௌரவத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.