இலங்கை மின்சார சபை இயந்திர, சிவில் மற்றும் மின் அதிகாரிகள் அடையாள வேலைநிறுத்தமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, கடந்த 4ம் திகதி இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வவுனியா வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்பதால் மேற்படி போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்க தலைவர் எ.ஜி.யு. நிஷாந்த கூறியுள்ளார்.