மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற மூன்று பேர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் 15ம் திகதி இந்துகல்லூரியின் வழங்கல் பிரிவிலிருந்து எடுத்துச் சென்று வவூனதீவு வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படும்.

மாந்தீவுக்கு இயந்திரபடகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான நேரம் ஆரம்பித்து மாலை 5மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுறுத்தப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றது என்றார்.