கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றுமுற்பகல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்பகல் 8.50 மணியளவில் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பிரதான மின்கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த மின்சார தடை நீடித்துள்ள நிலையில், விமான நிலைய குடிவரவு – குடியகழ்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.