பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 27 கிராம் கஞ்சா வைத்திருந்த நால்வரையும், 200 கிராம் ஹசிஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.