ஒரு நாட்டில் ஒருமித்த நாட்டில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரு சட்டத்தின் கீழ் வாழக்கூடிய ஒரு எதிர்கால அரசாங்கத்தை நான் உருவாக்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி, அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர் அதேபோன்று கலாசாரம் போன்ற விடயங்கள் கலாசார மண்டபம் அமைத்தல், வீட்டுப் பிரச்சினை, காணிப்பிரச்சினை சுற்றுலாத்துறையுடன் உள்ள பிரச்சினையை தீர்த்து வைத்தல், சமூக சேவை தொடர்பான விடயங்களை மேம்படுத்தல், இங்குள்ள மீன்பிடி கைத்தொழில் பிரச்சினையை நிவர்த்தி செய்து அதனை மக்களுக்கு சிறந்த முறையில் பெற்றுக்கொடுக்க எதிர்வரக்கூடிய 16 ஆம் திகதி ஜனாதிபதியானதன் பின்பு இந்த யாழ். மாவட்டத்தை அபிவிருத்தியின் முன்னணியில் திகழ்கின்ற ஒரு மாவட்டமாக மாற்றியமைக்க உறுதிபூணுகின்றேன் என தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று யாழ். சங்கிலியன் பூங்காவில் நேற்று (08) மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. இதில் அவர் உரையாற்றுகையில்….

இந்த நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு இலவச சீருடைகள் ஒரு பாதனியும் பகல் போசனம் இலவசமாக வழங்கப்படும். பாலர் பாடசாலையை கட்டியெழுப்ப பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரச சம்பளம் வழங்கப்படும் பாலர் பாடசாலைகளுக்கு மண்டபங்கள் புனரமைக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பகல் போசனமும் வழங்கப்படும் அத்துடன் பாலர் பாடசாலை கல்வியை முற்றாக இலவசக் கல்வி திட்டத்துடன் இணைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்றார்.

விவசாய துறையை கட்டியெழுப்ப நெல் பயிற்செய்கை சேனைப்பயிற்செய்கை தேயிலை, இறப்பர், தென்னை இவை அனைத்துக்கும் ஏற்ற பசளைகளை இலவசமாக என்னுடைய அரசாங்கத்தில் வழங்குவேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கும் கொண்டு வருவேன். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச மாநாடுகளை வடக்கு, கிழக்கில் நடத்துவேன் விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் இருக்கின்றது . இதில் இருக்கின்ற சிறு கைதொழில் புரிகின்ற சுயதொழில் புரிகின்றவர்கள் பாரிய கைத்தொழினை பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகை அடிப்படையில் அனைத்து உதவித்திட்டங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

யுத்தத்தினால் அவயவங்களை இழந்த அங்கவீனர்களுக்கு விசேட வேலைத்திட்டத்தினை இந்த நாட்டில் நாங்கள் அங்கத்துவம் வகிக்கும் அரசில் செய்வோம். வடக்கு கிழக்கினை நாங்கள் அபிவிருத்தியின் உச்சகட்டத்தில் திகளும் மாகாணங்களாக மாற்றியமைப்போம் என உறுதியாகக் கூறுகின்றேன். யாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் உள்ளன. 435 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. 1611 சிறு கிராமங்கள் இருக்கின்றன. இதை உள்ளடக்கிய அனைத்து தொகுதிகளையும் அபிவிருத்தி செய்வேன் உறுதியாக கூறுகின்றேன்.

ஒரு நாட்டில் ஒருமித்த நாட்டில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரு சட்டத்தின் கீழ் வாழக்கூடிய ஒரு எதிர்கால அரசாங்கத்தில் நான் உருவாக்குவேன் என்றார். என ஐனநாயக தேசிய முன்னணி ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாஸ தெரிவித்தார்.

இவ் சந்திப்பில் அமைச்சர்களாகிய ரிசாத் பதியுதீன், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.