யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் கவனயீர்பு ஊர்வலமும் ஆர்பாட்ட போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணி மட்டக்களப்பு, திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்.

உண்மை, நீதி, இழப்பீடு, 6 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு மீள இடம்பெறாமை போன்ற சுலோகங்கள் மற்றும் காணாமல் போன உறவுகளின் புகைப்படத்துடன் இந்த ஆர்பாட்டத்தில் பகல் 12 மணிவரை ஈடுபட்டு அங்கிருந்து ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.