வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில் வாக்களிப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேற்றை 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)