தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள் கடந்த 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் நண்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.