கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தையில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் குடியிருப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 உந்துருளிகள் என்பன சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீயை காவல்துறையினரும் கொழும்பு நகரசபையின் தீயணைப்பு படையினரும் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.