ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த முன்னைய 24 மணித்தியாலங்களில் 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.