அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹார செயற்படவுள்ளார். எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா, காமினி அமரசேகர ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஏனைய உறுப்பினராக செயற்படவுள்ளனர். மனுக்கள் நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.