ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பெஃரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.பெஃரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (13) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.

அதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் மறைமுகமாக அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினர்களிடம் கோருவதாக பெஃரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி குறிப்பிட்டார்.