நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (15) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (14) பாடசாலை நேரத்தின் பின்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது