355 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழங்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நிதிமன்ற நீதிபதி ஷசி மகேந்திரன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார்.

அன்றைய தினம் சாட்சியாளர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி அழைப்பாணை வௌியிட்டார்